சென்னை விமான நிலையத்தில் தரையிறங்கும் போது விமானத்தின் டயர் வெடித்ததால் பரபரப்பு நிலவியது.
சென்னை விமான நிலையத்திற்கு, மஸ்கட்டில் இருந்து 157 பேருடன் வந்த ஓமன் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், ஓடுபாதையில் தரையிறங்கிய போது, திடீரென அதன் டயர் பயங்கர சத்தத்துடன் வெடித்தது.
நிலை தடுமாறிய விமானத்தை விமானி சாதுர்யமாக நிறுத்திய நிலையில் விமான ஊழியர்கள், பயணிகள் அனைவரும் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர். இதனால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
















