திருச்செந்தூர் அருகேயுள்ள குலசேகரபட்டினம் முத்தாரம்மன் கோயிலில் தசரா திருவிழாவின் 4ஆம் நாளையொட்டி அம்மன், வண்ணமயில் வாகனத்தில் பாலசுப்ரமணியர் கோலத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
குலசேகரப்பட்டினத்தில் அமைந்துள்ள முத்தாரம்மன் கோயிலில், தசரா திருவிழா கடந்த 3ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.
12 நாட்கள் நடைபெறும் திருவிழாவின் ஒவ்வொரு நாளும், அம்மன் வெவ்வேறு அலங்காரத்திலும், வெவ்வேறு வாகனத்திலும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். அந்த வகையில் 4ஆம் நாளையொட்டி, வண்ணமயில் வாகனத்தில் பாலசுப்ரமணியர் கோலத்தில் அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
அதனைத்தொடர்ந்து அபிஷேக மண்டபத்தில் வைத்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.