நடிகர் பிரகாஷ்ராஜ் தனது படத்தின் ஷூட்டிங்கின்போது ஒரு கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தியதாக திரைப்பட தயாரிப்பாளர் வினோத் குமார் குற்றம் சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக அவர் சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். பிரகாஷ் ராஜ் நடிப்பில் சமீபத்தில் கொரட்டாலா சிவாவின் தேவாரா பாகம் 1 திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், பிரகாஷ்ராஜ் மீதான இந்த புகார் திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.