அரியலூர் அருகே முறையாக குடிநீர் வழங்கக்கோரி காலி குடங்களுடன் பொதுமக்கள் ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
கடுகூர் கிராமத்தில் 250-க்கும் மேற்பட்ட வீடுகளில் பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள ஆழ்துளை கிணறு பழுதடைந்ததால் கடந்த சில தினங்களாக முறையாக குடிநீர் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது.
இதுகுறித்து பலமுறை புகாரளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம் சாட்டும் பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.