மாலத்தீவுக்கு ஏதாவது பிரச்னை என்றால், முதலாவதாக உதவிக்கரம் நீட்டும் நாடு இந்தியாதான் என பிரதமர் மோடி குறிப்பிட்டார்.
நான்கு நாள் பயணமாக இந்தியா வந்த மாலத்தீவு அதிபர் முகமது மூயிஸை டெல்லி ஹைதராபாத் இல்லத்தில் பிரதமர் மோடி சந்தித்தார்.
அப்போது பேசிய பிரதமர் மோடி,
கொரோனா பெருந்தொற்று முதல் குடிநீர் தட்டுப்பாடு வரை மாலத்தீவுக்கு ஏதாவது பிரச்னை என்றால், முதலாவதாக உதவிக்கரம் நீட்டும் நாடு இந்தியாதான் என உறுதிப்படத் தெரிவித்தார்.
மேலும், இந்தியா, மாலத்தீவு இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை செயல்படுத்துவதற்கான பேச்சுவார்த்தையைத் தொடங்க தாங்கள் முடிவு செய்திருப்பதாகவும் பிரதமர் மோடி கூறினார்.