திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகே, தொடர் மழையால் நிலச்சரிவு ஏற்பட்டு பாறைகள் விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
கொடைக்கானலில் இருந்து பெரியகுளம் செல்வதற்கான அடுக்கம் ஊராட்சி சாலைகளில் கனமழையால் நிலச்சரிவு ஏற்பட்டதுடன், பாறைகளும் விழுந்ததால் போக்குவரத்து தடைபட்டுள்ளது. எனவே, பேரிடர் குழுவினர் விரைந்து சீரமைப்பு பணியில் ஈடுபட வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.