கோயம்பேடு காய்கறி சந்தையில் வரத்து குறைந்ததன் காரணமாக தக்காளியின் விலை அதிகரித்துள்ளது.
கோயம்பேடு காய்கறி சந்தையில் ஆந்திரா, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து காய்கறிகள் இறக்குமதி செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன.
இந்நிலையில், கடந்த வாரத்தை ஒப்பிடும்போது தக்காளியின் வரத்து குறைந்துள்ளதால் அதன் விலை இரு மடங்காக அதிகரித்துள்ளது. கோயம்பேடு சந்தையில் கடந்த சில தினங்களாக 40 ரூபாய் முதல் 60 ரூபாய் வரை தக்காளி விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில், தற்போது விலை அதிகரித்து கிலோ 80 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.