நாட்டைப் பாதுகாப்பதில் விமான படையினரின் பங்கு பாராட்டத்தக்கது என பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.
இந்தியப் பாதுகாப்புப் படையின் ஓர் அங்கமாக இந்திய விமானப் படை, 1932இல் அக்டோபர் மாதம் 8ஆம் நாளில், இந்தியா ஆங்கிலேய ஆதிக்கத்தின் கீழ் இருந்தபோது உருவாக்கப்பட்டது.
இந்திய விமானப்படைச் சட்டம் 1932 ன்படி பிரித்தானியா ராயல் விமானப் படையின் ஒரு பகுதியாக இந்திய விமானப்படை தோற்றுவிக்கப்பட்டது. தொடக்கத்தில் பிரித்தானியாவின் சீருடை மற்றும் முத்திரைகளையே, இந்திய விமான படையினரும் பின்பற்றினர்,
இந்நிலையில், இந்திய விமானப் படை தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில் “எங்கள் துணிச்சலான விமான வீரர்களுக்கு விமானப்படை தின வாழ்த்துக்கள். விமானப்படை தைரியம் மற்றும் தொழில்முறைக்காக போற்றப்படுகிறது. நமது நாட்டைப் பாதுகாப்பதில் அவர்களின் பங்கு மிகவும் பாராட்டத்தக்கது என பிரதமர் மோடி தெரிவித்துளளார்.