ஆன்லைன் மோசடி கும்பலிடம் விழிப்புடன் இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, நடிகர் யோகிபாபு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வீடியோ வெளியாகியுள்ளது.
சமீப காலமாக சென்னையில் இளைஞர்களையும், முதியோர்களையும் குறிவைத்து நடத்தப்படும் சைபர் கிரைம் மோசடி அதிகரித்துள்ளது.
இந்த நிலையில் சென்னை காவல்துறை சார்பில் சைபர் கிரைம் மோசடியில் ஈடுபடக்கூடிய கும்பலிடம் இருந்து பொதுமக்கள் தங்களை தற்காத்துக் கொள்ள வேண்டி நடிகர் யோகி பாபு மூலமாக விழிப்புணர்வு காணொளி ஒன்றினை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளனர்.
புகார் அளிக்கும் பட்சத்தில் மோசடி கும்பல் மீது காவல்துறை சார்பில் துரிதமாக செயல்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பொதுமக்கள் யாரும் போலி அலைபேசி அழைப்புகளை நம்பி தங்களது பணத்தை பரிவர்த்தனை செய்து ஏமாற வேண்டாம் என அந்த வீடியோ காட்சியில் யோகி பாபு கேட்டுக்கொண்டுள்ளார்.