ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை மற்றும் தசரா திருவிழாக்களின் தொடர் விடுமுறையை முன்னிட்டு சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.
அதில், கோவையில் இருந்து சென்னை எழும்பூருக்கும், மறுமார்க்கமாக, சென்னை எழும்பூரில் இருந்து கோவை போத்தனூருக்கும் சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது.
மேலும், நாகர்கோவிலிருந்து சென்னைக்கும், சென்னையில் இருந்து நாகர்கோவிலுக்கும் சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல, சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கும், மறுமார்க்கமாக தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கும் சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.