நாளை வெளியாகும் ரஜினியின் வேட்டையன் திரைப்படத்தின் சிறப்பு காட்சிக்கு தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.
ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் திரைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ளார். அமிதாப் பச்சன், பகத் பாசில், ராணா டகுபதி, ரித்திகா சிங், துஷாரா விஜயன் மற்றும் பலர் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ளார்.
இந்நிலையில் வேட்டையன் திரைப்படம் நாளை வெளியாகிறது.இதனையொட்டி சிறப்புகாட்சிக்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.
வழக்கமாக 4 காட்சிகள் திரையிடப்படும் நிலையில், கூடுதலாக ஒரு காட்சிக்கு தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. அதாவது, காலை 9 மணி முதல் இரவு 2 மணி வரை என மொத்தம் 5 காட்சிகளுக்கு அனுமதி வழங்கியுள்ளது.