பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று பிறந்த நாள் கொண்டாடும் நிலையில் மத்திய அமைச்சர் எல்.முருகன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அவர் விடுத்துளள வாழ்த்து செய்தியில், பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான சகோதரர் அன்புமணியை
தொலைபேசியில் அழைத்து பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டேன்.
தமிழகத்தின் வளர்ச்சிக்கு சமரசமின்றி தொடர்ந்து குரல் கொடுத்து வரும் தங்களது சமுதாயப் பணிகள் தொடர்ந்திடவும், வாழ்வின் அனைத்து விதமான மகிழ்வும், ஆரோக்கியமும் பெற்று இன்புற வாழ்ந்திட இறைவனிடம் வேண்டிக் கொள்கிறேன் என எல்.முருகன் தெரிவித்துள்ளார்.