லெபனானை இஸ்ரேல் தாக்கினால் அந்நாடு கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என ஹிஸ்புல்லா கிளர்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்தனர்.
முன்னதாக இஸ்ரேல்-லெபனான் எல்லையில் அமைந்துள்ள ஹைஃபா பகுதியில் ராக்கெட் குண்டுகளை வீசி ஹிஸ்புல்லா தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதலை இஸ்ரேல் வெற்றிகரமாக முறியடித்த நிலையில், அந்நாட்டுக்கு ஹிஸ்புல்லா எச்சரிக்கை விடுத்துள்ளது.