ஹிந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியில் கழுதையை பயன்படுத்தியதற்கு பீட்டா அமைப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
நடிகர் சல்மான்கான் தொகுத்து வழங்கும் இந்தி பிக்பாஸ் சீசன் 18 நிகழ்ச்சி
கடந்த 6-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் கழுதையை வளர்க்க வேண்டும் என போட்டியாளர்களுக்கு நிபந்தனை விதிக்கப்பட்டது.
அதன்படி பிக்பாஸ் வீட்டிற்குள் கழுதை கொண்டு வரப்பட்டது. இதற்கு பலதரப்பினரும் விமர்சனங்களை தெரிவித்து வரும் நிலையில், பீட்டா அமைப்பு நடிகர் சல்மான்கானுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.
அதில் பிக்பாஸ் வீட்டில் கழுதையை வைத்திருப்பதால் பொதுமக்கள் தரப்பிலிருந்து புகார்கள் பெறப்பட்டதாகவும், கழுதையை தங்கள் அமைப்பிடம் ஒப்படைக்க வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.