பெண்களுக்கான டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் வங்கதேச அணியை வீழ்த்தி வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்றது.
பெண்களுக்கான 9-வது டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி துபாய் மற்றும் சார்ஜாவில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியின் லீக் ஆட்டத்தில் வங்கதேச அணியுடன், வெஸ்ட் இண்டீஸ் அணி மோதியது.
இதில் முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 103 ரன்கள் எடுத்தது. இதையடுத்து களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 12.5 ஓவர்களில் 104 ரன்கள் எடுத்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.