ஆயுத பூஜையையொட்டி தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுத்து தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் இயக்கி வருவது தெரியவந்துள்ளது.
ஆயுத பூஜை, தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகைக் காலங்களில் சென்னை, கோவை உள்ளிட்ட பெரு நகரங்களில் இருந்து மக்கள் சொந்த ஊர்களுக்குச் செல்வர்.
இந்த காலங்களில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டாலும் கூட்ட நெரிசல் அதிகரித்தே காணப்படும். இந்நிலையில், ஆயுத பூஜையையொட்டி விழுப்புரம் பணிமனை கோட்டத்தில் தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுத்து இயக்கி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
அரசு பேருந்துகளை காட்டிலும், தனியார் பேருந்துகளில் கட்டணம் அதிகமாக வசூலிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. கார் ரேஸ் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு செலவழிக்கும் தமிழக அரசு, போக்குவரத்து துறைக்கு போதிய பேருந்துகளை கொள்முதல் செய்யாமல் தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுத்து இயக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.