சென்னை மடிப்பாக்கம் குபேரன் நகரில் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்த விபத்தில் படுகாயமடைந்த பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
மடிப்பாக்கம் குபேரன் நகரில் வாடகை வீட்டில் வசித்து வந்த லின்சி பிளஸினா என்பவர் கடந்த 7-ம் தேதி வீட்டில் சமையல் எரிவாயு சிலிண்டரில் ஏற்பட்ட தீ விபத்தில் படுகாயமடைந்தார்.
வீட்டில் சிலிண்டர் தீர்ந்துவிட்ட நிலையில், உடன் பணியாற்றிய நண்பர் மணிகண்டன் என்பவர் வீட்டில் இருந்து எடுத்து வந்த சிலிண்டரை பொருத்தியபோது எதிர்பாராத விதமாக தீ விபத்து ஏற்பட்டது.
இதில் இருவர் காயமடைந்த நிலையில், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த லின்சி அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.