ராமநாதபுரத்தில் பெய்த கனமழையால் ஆயுத பூஜை வியாபாரத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
ஆயுத பூஜை கொண்டாட்டத்தையொட்டி ஏராளமான பகுதிகளில், பூ, பழம்,பொறி என சாலையோர வியாபாரிகள் கடைகள் அமைத்திருந்தனர்.
இந்த நிலையில் கேணிக்கரை, சாலை தெரு, அரண்மனை உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இதனால் ஆயுத பூஜை வியாபாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டதாக வியாபாரிகள் வேதனை தெரிவித்தனர்.