ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய விடுதலை 2 படத்தின் டப்பிங் பணிகள் தொடங்கியுள்ளன.
வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர்கள் சூரி, விஜய் சேதுபதி ஆகியோர் இணைந்து நடித்த இந்த படம் கடந்த ஆண்டு வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. இந்நிலையில், விடுதலை 2 -ம் பாகத்திற்கான படப்பிடிப்பு முக்கிய இடங்களில் நிறைவு பெற்றுள்ளது.
இந்த படம் வரும் டிசம்பர் மாதம் 20-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், விடுதலை 2 -ம் பாகத்தின் டப்பிங் பணிகள் தொடர்பான புகைப்படங்களை படக்குழு வெளியிட்டுள்ளது.