அனைவரின் கனவுகள், இலக்குகள் நிறைவேற, அம்பிகைத் தாயின் அருள் கிடைக்கட்டும் என தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
அவர் விடுத்துள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்துள்ளதாவது : “தீமையின் மீது நன்மையின் வெற்றியைப் பிரதிபலிக்கும் விஜயதசமி நன்னாளான இன்று, தமிழக மக்கள் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
குழந்தைகள் கல்வியையும், பெரியவர்கள் புதிய தொழில்களையும் துவங்கும் புண்ணிய தினமான விஜயதசமி நன்னாளில், அனைவரின் கனவுகள் மற்றும் இலக்குகள் நிறைவேற, அம்பிகைத் தாயின் அருள் கிடைக்கட்டும்” என அண்ணாமலை கூறியுள்ளார்.