இந்திய சுதந்திரப் போராட்ட தியாகி வீரத்தாய் குயிலியின் தியாகங்களை போற்றி வணங்கிடுவோம் என மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
இந்திய சுதந்திரப் போராட்ட தியாகி வீரத்தாய் குயிலி அவர்களின் 244-வது நினைவு தினம் இன்று. இராணி வேலுநாச்சியாரின் படைத் தளபதியாக நின்று, எதிரிகளை வீழ்த்துவதில் பெரும் வீராங்கனையாக திகழ்ந்தவர் வீரத்தாய் குயிலி அவர்கள்.
தாய்நாட்டின் விடுதலைக்காக வீரமுடன் நின்ற வீரப் பெண்மணி. தன்னையே ஆயுதமாக்கி தாய் மண்ணை காத்திட்ட குயிலி அம்மையாரின் தீரம் நிறைந்த செயல்பாடுகளை, நமது சந்ததிகளுக்கு எடுத்துரைத்து வளர்ப்போம்; அவர்களது தியாகங்களை போற்றி வணங்கிடுவோம் என எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
இதனிடையே மாபெரும் சுதந்திரப் போராட்ட வீரரும், சோசலிச தலைவருமான டாக்டர் ராம் மனோகர் லோஹியாவின் நினைவு நாளை முன்னிட்டு எல்.முருகன் விடுத்துள்ள பதிவில், சமூக நீதிக்காகவும், சமத்துவத்திற்காகவும், விளிம்புநிலை மக்களின் முன்னேற்றத்திற்காகவும் அயராது போராடிய தொலைநோக்கு பார்வையாளரான டாக்டர் லோகியாவின் இலட்சியங்கள் இன்றும் நமக்கு ஒளி விளக்காகத் திகழ்கின்றன என தெரிவித்துள்ளார். சாமானியர்களின் நலனுக்கான அவரது அர்ப்பணிப்பும், அவரது புரட்சிகர சிந்தனைகளும் நமது தேசத்திற்கு வழிகாட்டும் வெளிச்சம் என கூறியுள்ளார்.