வேட்டையன் திரைப்படத்தை தமிழ் ராக்கர்ஸ் இணையத்தில் வெளியிட்ட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
தமிழ் உள்ளிட்ட பிற மொழிகளில் வெளியாகும் திரைப்படங்கள் வெளியான சில மணி நேரங்களிலேயே தமிழ் ராக்கர்ஸ் இணையத்தில் வெளியாவது வாடிக்கையாக இருந்து வருகிறது.
இந்நிலையில் வேட்டையைன் திரைப்படம் வெளியான சிலமணி நேரத்திலேயே தமிழ் ராக்கர்ஸ் இணையத்தில் வெளியிடப்பட்டது. இதேபோல மலையாளத்தில் வெளியான ஒரு திரைப்படத்தையும் தமிழ் ராக்கர்ஸ் வெளியிட்டது.
இதுகுறித்து விசாரணை மேற்கொண்ட கொச்சி போலீசார், தமிழகத்தை சேர்ந்த பிரவீன் குமார், குமரேசன் ஆகிய இருவரை கைது செய்தனர்.