திருவள்ளூர் மாவட்டம் கவரப்பேட்டையில் ரயில் விபத்து நடந்த இடத்தில் என்ஐஏ அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
கவரப்பேட்டை அருகே சென்று கொண்டிருந்த மைசூர் – தர்பங்கா பயணிகள் விரைவு ரயில் விபத்தில் சிக்கியதில் 10-க்கும் மேற்பட்ட ரயில் பெட்டிகள் கவிழ்ந்தன. இதில் 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்த நிலையில் அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.
மணிக்கு 90 கிலோ மீட்டர் வேகத்தில் சென்று விபத்தில் சிக்கிய நிலையிலும் நல்வாய்ப்பாக உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை. சீரமைப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில் விபத்துக்கான காரணம் குறித்து ரயில்வே அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் விபத்துக்கு சதித்திட்டம் ஏதேனும் காரணமா எனும் கோணத்தில் என்.ஐ.ஏ. அதிகாரிகளும் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.