மதரஸாக்களுக்கு நிதியுதவி வழங்குவதை நிறுத்த வேண்டும் என வலியுறுத்தி அனைத்து மாநில அரசுகளையும் தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் வலியுறுத்தியுள்ளது.
தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம், உரிமைகளை ஒடுக்குபவர்கள் எனும் 11 அத்தியாயங்களைக் கொண்ட தனது அறிக்கை ஒன்றை சுட்டிக்காட்டி, அனைத்து மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளது. அதில் அனைத்து மாநிலங்களும் மதரஸாக்களுக்கு நிதியுதவி அளிப்பதை நிறுத்த வேண்டும் எனவும், மதரஸா வாரியங்களை மூட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளது.
ஆர்டிஇ சட்டத்தின்படி, முஸ்லிம் அல்லாத குழந்தைகளை மதரஸாக்களில் இருந்து நீக்கி, முறையான பள்ளிகளில் சேர்க்கவும் ஆணையம் வலியுறுத்தியுள்ளது. , முஸ்லீம் குழந்தைகள் பரிந்துரைக்கப்பட்ட கல்வி மற்றும் பாடத்திட்டத்தைப் பெறுவதை உறுதி செய்வதற்காக, அவர்களும் முறையான பள்ளிகளில் சேர்க்கப்பட வேண்டும் என்பதையும் ஆணையம் பரிந்துரைத்துள்ளது.
சமீபத்தில் மகாராஷ்டிரா அரசு மதரஸா ஆசிரியர்களுக்கான ஊதியத்தையும், மௌலானா ஆசாத் சிறுபான்மை பொருளாதார மேம்பாட்டு கழகத்தின் பங்கு மூலதனத்தையும் உயர்த்தி உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.