ஜூஸ் கடை TO சூதாட்டம், கோடிகளை சுருட்டிய 'மகாதேவ்' துபாயில் சிக்கியது எப்படி? சிறப்பு கட்டுரை!
Jul 25, 2025, 06:23 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஜூஸ் கடை TO சூதாட்டம், கோடிகளை சுருட்டிய ‘மகாதேவ்’ துபாயில் சிக்கியது எப்படி? சிறப்பு கட்டுரை!

Web Desk by Web Desk
Oct 12, 2024, 08:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

துபாயில் கைது செய்யப்பட்ட மகாதேவ் கிரிக்கெட் சூதாட்ட செயலியின் உரிமையாளரை இந்தியாவுக்கு கொண்டுவரத் தேவையான நடவடிக்கைகளை மத்திய புலனாய்வு அமைப்புகள் மேற்கொண்டு வருகின்றன. அதுபற்றி விரிவாக பார்க்கலாம்.

இந்தியாவை பொறுத்தவரை கிரிக்கெட் என்பது ஒரு விளையாட்டு மட்டுமல்ல… கோடிக்கணக்கான ரூபாய் புழங்கும் பெரும் வணிகம்.

சாதி, மதம், மொழி கடந்து கோடிக்கணக்கான இந்தியர்களால் நேசிக்கப்படுவதால் கிரிக்கெட் எப்போதும் தங்க முட்டையிடும் வாத்துதான். சட்டப்படியோ அல்லது சட்டவிரோதமாகவோ பல தொழில்கள் கிரிக்கெட்டைச் சுற்றி நடந்து கொண்டிருக்கின்றன. அதில் ஒன்றே மகாதேவ் சூதாட்ட செயலி.

சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள BHILAI என்ற இடத்தில் சௌரப் சந்த்ராகர் என்பவர் JUICE கடை நடத்தி வந்தார். இன்னும் சில ஆண்டுகளில் கோடிக்கணக்கான ரூபாய் செலவில் உனக்கு திருமணம் நடக்கும் என்று யாராவது அவரிடம் கூறியிருந்தால் அந்த நபருக்கு மனநிலை சரியில்லை என்று நினைத்திருப்பார் சௌரப். ஆனால் உண்மையிலேயே அப்படி நடந்தது. அல்லது சௌரப் நடத்திக் கொண்டார். அது எப்படி சாத்தியமானது???

JUICE கடை உரிமையாளரான சௌரப்பை மகாராஜா ஆக்கியது மகாதேவ் சூதாட்ட செயலி. ரவி உப்பல் என்பவருடன் இணைந்து துபாயில் இருந்து மகாதேவ் செயலியை இயக்கினார் சௌரப். இதற்காக இருவரும் 2019-ஆம் ஆண்டு துபாய் சென்றுள்ளனர். இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட சில ஆசிய நாடுகளில் மகாதேவ் செயலியை இயக்கியுள்ளனர்.

CRICKET BETTING மூலம் கிட்டத்தட்ட 6 ஆயிரம் கோடி ரூபாயை இருவரும் முறைகேடாக ஈட்டியுள்ளனர் என்ற தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மலேசியா, தாய்லாந்து, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய இடங்களில் CALL CENTRE-களை அமைத்து மகாதேவ் செயலியை விரிவுபடுத்தியிருக்கிறார்கள் இருவரும்.

2023-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஐக்கிய அரபு அமீரகத்தைச் சேர்ந்த பெண்ணை திருமணம் செய்து கொண்டார் சௌரப். பாலிவுட்டைச் சேர்ந்த 17 பிரபலங்கள் அவரது திருமணத்தில் கலை நிகழ்ச்சி நடத்தினார்களாம். அதற்காக தனி விமானத்தில் பிரபலங்களை துபாய்க்கு அழைத்துச் சென்றுள்ளார். அவர்களுக்கு கோடிக்கணக்கில் பணம் கொடுக்கப்பட்டதாகவும் தெரிகிறது. மகாதேவ் செயலி மூலம் தமக்கு கிடைத்த ஒருநாள் வருமானத்தை திருமணத்துக்காக சௌரப் செலவு செய்துள்ளார்.

அவருடைய ஒரு நாள் வருமானம் எவ்வளவு தெரியுமா? 200 கோடி ரூபாய். இந்த பிரமாண்ட திருமணத்துக்குப் பிறகே மகாதேவ் செயலி குறித்தும் சௌரப் சந்த்ராகர் குறித்தும் அதிகம் பேசப்பட்டது.

தமது திருமணம் மற்றும் மகாதேவ் செயலியின் வெற்றி விழாவில் கலந்து கொண்டதற்காக ஹவாலா முறையில் பாலிவுட் பிரபலங்களுக்கு சௌரப் பணம் வழங்கியதாக புகார் எழுந்தது. உடனடியாக அமலாக்கத்துறை உள்ளிட்ட மத்திய புலனாய்வு அமைப்புகள் களத்தில் இறங்க, கிணறு வெட்ட பூதம் கிளம்பிய கதையாக சத்தீஸ்கர் மாநில அரசியலையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய விவகாரங்கள் எல்லாம் வெளிவந்தன.

ஆம். சத்தீஸ்கர் முன்னாள் முதலமைச்சர் பூபேஷ் பாகலுக்கு சௌரப் சந்த்ராகர் 508 கோடி ரூபாய் லஞ்சம் கொடுத்ததாக குற்றம்சாட்டப்பட்டது. தம் மீது நடவடிக்கை எடுக்காமல் இருப்பதற்காக அரசு அதிகாரிகள், காவல்துறையினர், அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு பொட்டிபொட்டியாக கோடிக்கணக்கில் அள்ளிக்கொடுத்தார் சௌரப் என்கின்றன விசாரணை அமைப்புகள்.

ரெட் கார்னர் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்ட நிலையில் கடந்த டிசம்பர் மாதம் துபாயில் கைது செய்யப்பட்டார் சௌரப். அவரையும் ரவி உப்பலையும் துபாய் காவல்துறை வீட்டுக்காவலில் வைத்திருக்கிறது. இந்நிலையில் இருவரையும் இந்தியாவுக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை இருநாட்டு உயரதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

சௌரப் சந்த்ராகர் இந்தியா கொண்டு வரப்பட்டால் மேலும் பல பூதங்கள் கிளம்பி புயலைக் கிளப்பலாம்.

Tags: Mahadev cricket gambling appcricket gamblingMahadev cricket gambling app owner arrestedSaurabh Chandrakar
ShareTweetSendShare
Previous Post

வங்கதேசத்தில் நடைபெறும் சம்பவம் இந்தியாவில் வசிக்கும் இந்துக்களுக்கு பாடம் – ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் எச்சரிக்கை!

Next Post

புரட்டாசி மாத கடைசி சனிக்கிழமை – ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் குவிந்த பக்தர்கள்!

Related News

பிரதமர் மோடியின் புதிய பாணி : எதிரி நாடுகளை அடிபணிய வைக்கும் அதிசயம்!

நாடாளுமன்றம் முடக்கம் – 2 நாளில் ரூ.25 கோடி வீண் – மக்கள் பணத்தை வீணடிக்கும் எதிர்க்கட்சிகள்!

ஏழ்மையை பயன்படுத்தி சிறுநீரகங்கள் திருட்டு: திமுக எம்எல்ஏ.,விற்கு தொடர்பா?

50 பேருடன் மாயமான ரஷ்ய விமானம் : உடைந்த பாகங்கள் மீட்பு – பயணிகள் நிலை என்ன?

மோசடியில் புது ரூட் : போலி தூதரகம் தொடங்கி பணம் சுருட்டிய கில்லாடி!

கங்கை கொண்ட சோழபுரம் கோயில் : சோழர்கள் கட்டடக்கலைக்கு வரலாற்று சான்று!

Load More

அண்மைச் செய்திகள்

ரூ.96 கோடி அம்போ… : ரவுடிகளின் ராஜ்ஜியமான ஈரடுக்கு பேருந்து நிலையம்!

வலிமையான பாஸ்போர்ட் பட்டியல் : உலகளவில் 77வது இடத்திற்கு இந்தியா முன்னேற்றம்!

ஏவுகணைத் திட்டம் டமால் : மீண்டும் மண்ணை கவ்விய பாகிஸ்தானின் ஷாஹீன்-3!

தமிழக பெண்கள் திமுக அரசின் மீது கடும் அதிருப்தியில் இருக்கிறார்கள் : அண்ணாமலை

கழிவறையில் ரேஷன் கடையின் அரிசி மூட்டைகள் : திமுக அரசுக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம்!

எடப்பாடி பழனிசாமிக்கு இந்து முன்னணி கண்டனம்!

முதலமைச்சர் ஸ்டாலின் நலமுடன் உள்ளார் – மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை!

இரண்டு குழந்தைகளை கொன்ற அபிராமிக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை!

திமுக  ஆட்சியில் உடனடி சிகிச்சை என்பது ஏழை எளியோருக்கு எட்டாக்கனியாகவே இருக்கிறது : அண்ணாமலை குற்றச்சாட்டு!

மீன்பிடி தடை கால நிவாரணம் உயர்த்தி வழங்கப்படும் – எடப்பாடி பழனிசாமி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies