கடந்த 10 ஆண்டுகளில் இலங்கை கடற்படையால் 3 ஆயிரத்து 288 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதும், 558 படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் தெரியவந்துள்ளது.
எல்லை தாண்டி மீன் பிடிப்பதாக கூறி தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்து அவர்களின் படகுகளை பறிமுதல் செய்வது வாடிக்கையாகி வருகிறது.
இதுகுறித்து இலங்கை அரசிடம் தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ் கேட்கப்பட்ட தகவலின்படி, கடந்த 10 ஆண்டுகளில் 3 ஆயிரத்து 288 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.
அதன்படி, கடந்த 2014-ஆம் ஆண்டு 787 மீனவர்கள், 2015-ல் 454 மீனவர்கள், நடப்பாண்டில் 268 மீனவர்கள் என கடந்த 10 ஆண்டுகளில் மொத்தம் 3 ஆயிரத்து 288 மீனவர்கள் கைது செய்யப்பட்டு, 558 படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. பறிமுதல் செய்யப்பட்ட 558 படகுகளில் 365 படகுகள் நாட்டுடமையாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.