கவரப்பேட்டையில், சரக்கு ரயில் மீது பயணிகள் ரயில் மோதி விபத்துக்குள்ளான சம்பவத்தில். 13 ரயில்வே ஊழியர்களுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே கவரப்பேட்டை ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் மீது பயணிகள் விரைவு ரயில் மோதி விபத்துக்குள்ளானதில் 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
கவரப்பேட்டை ரயில் நிலையம் பகுதியில், விபத்தில் தடம்புரண்ட 13 பெட்டிகள் அகற்றப்பட்டன.
இந்நிலையில், விபத்துக்கு காரணம் சிக்னல் கோளாறா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்ற கோணத்தில் ரயில்வே துறை மற்றும் தமிழ்நாடு காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர். ரயில் விபத்து குறித்து கொருக்குப்பேட்டை போலீசார் நான்கு பிரிவில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இதனிடையே, கவரப்பேட்டை ஸ்டேஷன் மாஸ்டர் முனிபிரசாத்பாபு,
லோகோ பைலட் சுப்பிரமணியன் உள்ளிட்ட 13 பேரும் விசாரணைக்கு ஆஜராகும்படி தென்னக ரயில்வே சார்பில் சம்மன் அனுப்பி உள்ளது.