நீலகிரி மாவட்டம் கீழ் கோத்தகிரி அருகே 20 அடி குழிக்குள் விழுந்தவரை ஆக்சிஜன் சிலிண்டர் உதவியுடன் தீயணைப்புத் துறையினர் பத்திரமாக மீட்டனர்.
கரிக்யூர் பகுதியில் உள்ள பங்களாபாடி என்ற கிராமத்தில் பாழடைந்து காணப்பட்ட வீட்டின் அருகே இருந்த 20 அடி பள்ளத்தில் இருந்து கூச்சல் சத்தம் கேட்டது. இதனால் திடுக்கிட்ட கிராம மக்கள், குழிக்கு அருகே சென்று பார்த்தபோது சுப்பிரமணி என்பவர் குழிக்குள் தவறி விழுந்திருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து தகவலறிந்த தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று, ஆக்சிஜன் சிலிண்டரை குழிக்குள் இறக்கினர். பின்னர் கயிறு கட்டி அவரை மீட்டனர்.