மேற்கு வங்க மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் 9 நாட்களாக பிரதிஷ்டை செய்யப்பட்ட துர்கா சிலைகள் ஊர்வலமாக கொண்டு சென்று நீர் நிலைகளில் கரைக்கப்பட்டன.
விஜயதசமி நிறைவடைந்ததையொட்டி மேற்கு வங்க மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் துர்கா சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டனர். இந்த சிலைகளுக்கு கடந்த 9 நாட்களாக நாள்தோறும் பக்தர்கள் பூஜைகள் செய்து வந்தனர். இநிலையில் அந்த சிலைகள் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு அருகில் உள்ள நீர்நிலைகளில் கரைக்கப்பட்டன.
இந்த ஊர்வலத்தில், சிறுவர்கள், இளைஞர்கள் என ஏராளமானோர் பங்கேற்று வர்ணங்களை பூசி உற்சாகமாக நடனமாடினர். சிலைகளை கரைத்த பின்னர் அருகிலிருந்த கோயில்களுக்கு சென்று வழிபாடு நடத்தினர்.