திருவள்ளூர் மாவட்டம் கவரப்பேட்டையில் விபத்துக்குள்ளான பாகமதி விரைவு ரயிலின் என்ஜின், சென்னை ராயபுரம் பணிமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.
திருவள்ளூர் மாவட்டம் கவரைப்பேட்டை ரயில் நிலையத்தில் 2 நாட்களுக்கு முன்பு சரக்கு ரயில் மீது பாகமதி விரைவு ரயில் மோதி விபத்து ஏற்பட்டது. 2 நாட்களாக நடைபெற்று வந்த சீரமைப்பு பணிகள் நிறைவு பெற்று அந்த வழியாக ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது.
இதனிடையே, தடம்புரண்ட ரயில் என்ஜினை தண்டவாளத்தின் மீது ஏற்றும் பணி பல மணிநேரம் நடைபெற்றது. நவீன மின்தூக்கி ஜாக்கிகளுடன் உதவியுடன், ரயில் என்ஜின் தண்டவாளத்தில் ஏற்றப்பட்டது. பின்னர் அந்த என்ஜின் சென்னை ராயபுரம் பணிமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.