நவராத்திரி விழாவையொட்டி சென்னை கே.கே.நகரில் வீட்டையே கொலுவுடன் கூடிய குகை கோயிலாக மாற்றியமைத்து வழிபாடு நடத்திவரும் தம்பதியினரின் செயல் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
கே.கே. நகரை சேர்ந்த பத்ரி நாராயணன் – ஜெயலட்சுமி தம்பதியினர் நவராத்திரியையொட்டி தங்களது வீட்டையே கொலுவுடன் கூடிய குகை கோயிலாக மாற்றியமைத்துள்ளனர். பிரம்மிப்பாக காட்சியளிக்கும் இந்த குகை கோயிலில், 45 வருட பாரம்பரியத்துடன் கூடிய தனித்துவமான நவராத்திரி கொலு அமைக்கப்பட்டுள்ளது.
இந்த கொலுவில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட லிங்கங்கள், ருத்ராட்சங்கள், மனதைக் கவரும் படிகங்கள், படிகப் பாறைகள், பெரிய சங்குகள், கோமதி சக்ரம், விஷ்ணு சக்ரம் மற்றும் பிற இயற்கை அதிசயங்கள் இடம்பெற்றுள்ளன.
இவை, 45 வருட மரபோடு இந்தியாவின் பெருமையை வெளிக்காட்ட கூடியவைகளாக அமைந்துள்ளது தனிச்சிறப்பாகும். மேலும், இங்குள்ள மிகப் பெரிய ருத்ராட்ச மலை, கல்பவிருக்ஷம், ஐஸ்வர்ய மரம் போன்றவை பிரம்மிப்பை ஏற்படுத்துவதுடன் வாழ்க்கையின் பலனை பற்றி எடுத்துக் கூறும் வகையில் அமைந்துள்ளன.