ஏர் இந்தியா விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதையடுத்து நியூயார்க் செல்ல வேண்டிய விமானம் பத்திரமாக டெல்லியில் தரையிறக்கப்பட்டது.
மும்பை விமான நிலையத்தில் இருந்து ஏர் இந்தியா விமானம் நியூயார்க் புறப்பட்டது. அந்த விமானத்தில் வெடிகுண்டு உள்ளதாக தகவல் வெளியானது. இதனையடுத்து டெல்லி விமான நிலையத்தில் விமானம் தரையிறக்கப்பட்டது.
டெல்லியில் தரையிறங்கிய விமானத்தில் உள்ள பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், விமானத்தில் இருந்த பயணிகளை வெளியேற்றிவிட்டு வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.