கனவுகளின் நாயகன் : APJ அப்துல் கலாம் நினைவை போற்றுவோம் - சிறப்பு கட்டுரை!
May 23, 2025, 07:50 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கனவுகளின் நாயகன் : APJ அப்துல் கலாம் நினைவை போற்றுவோம் – சிறப்பு கட்டுரை!

Web Desk by Web Desk
Oct 15, 2024, 08:00 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கனவு காணுங்கள் – கனவுகளிலிருந்து சிந்தனைகள் பிறக்கும் – சிந்தனைகள் செயல்களாகும் என்று இளைஞர்களுக்கு சிறந்த வழிகாட்டியாகத் திகழ்ந்த ஏவுகணை நாயகனான டாக்டர் அப்துல் கலாம் அவர்கள் நினைவைப் போற்றும் விதமாக ஒரு செய்தி தொகுப்பு.

தமிழகத்தின் ராமேஸ்வரத்தில் 1931ம் ஆண்டு அக்டோபர் 15ம் நாள், ஜைனுலாபுதீன் – ஆஷியம்மா தம்பதியினரின் 5வது மகனாக அப்துல் கலாம் பிறந்தார். ஆவுல் பக்கிர் ஜைனுலாபுதீன் அப்துல் கலாம் என்பதன் சுருக்கமே ஏ.பி.ஜெ. அப்துல் கலாம்.

மீனவர் குடும்பத்தில் பிறந்து, சிறுவயதில் வறுமையின் பின்னணியிலேயே வளர்ந்த அப்துல் கலாம், மாணவனாக இருக்கும்போதே குடும்ப வருமானத்துக்காக தினமும் செய்தித்தாள் விநியோகிக்கும் பணியைச் செய்தார்.

ராமேஸ்வரத்தில் பள்ளிப் படிப்பை முடித்த அப்துல் கலாம், திருச்சியில் உள்ள தூய வளனார் கல்லூரியில் சேர்ந்து இயற்பியலில் பட்டம் பெற்றார். பிறகு, சென்னையில் உள்ள எம்.ஐ.டி.யில் 1955ஆம் ஆண்டு விண்வெளி பொறியியல் படிப்பில் சேர்ந்து முதுகலை பட்டம் பெற்றார்.

விமானியாக வேண்டும் என்ற ஆசையிருந்தும், அந்த துறையில் இடம் கிடைக்காததால் பாதுகாப்புத்துறை தொழில் நுட்ப படிப்பைத் தேர்வு செய்தாக அப்துல் கலாம் தெரிவித்திருந்தார்.

1960ஆம் ஆண்டு, மெட்ராஸ் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜியில் பட்டம் பெற்ற பிறகு, அவர் ஒரு ஏரோநாட்டிக் டெவலப்மென்ட் நிறுவனத்தில் சேர்ந்து ஒரு சிறிய ஹோவர் விமானத்தை வடிவமைத்தார்.

இந்திய விண்வெளித் திட்டத்தின் தந்தை எனப் போற்றப்படும் விக்ரம் சாராபாயின் கீழ் INCOSPAR கமிட்டியில் பணியாற்றிய டாக்டர் அப்துல் கலாம், 1969 ஆம் ஆண்டு, இஸ்ரோவுக்கு பணி மாறுதல் பெற்றார். இந்தியாவின் முதல் செயற்கைக்கோள் ஏவுகணை வாகனமான SLV-III டாக்டர் அப்துல் கலாமின் மேற்பார்வையில் வெற்றிகரமாக உருவாக்கப்பட்டது.

1970-களில், பாலிஸ்டிக் ஏவுகணைகளை உருவாக்க ப்ராஜெக்ட் டெவில் மற்றும் ப்ராஜெக்ட் வேலியண்ட் ஆகியவற்றின் இயக்குனராக டாக்டர் அப்துல் கலாம் பணிபுரிந்தார். ஜூலை 1992ம் ஆண்டு முதல் 1999ம் ஆண்டு டிசம்பர் வரை இந்திய பிரதமரின் முதன்மை அறிவியல் ஆலோசகராகவும், பாதுகாப்பு ஆர் & டி அமைப்பின் செயலாளராகவும் டாக்டர் அப்துல் கலாம் இருந்தார்.

ஜூன் 2002ம் ஆண்டு, இந்தியாவின் 11வது குடியரசு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். குடியரசு தலைவரான பிறகும், பல்வேறு பல்கலைக்கழங்களில் தொழில்நுட்ப விரிவுரையாளராக கல்விப் பணியாற்றி வந்தார்.

ஒரு விஞ்ஞானியாகவும், அறிவியல் அறிஞராகவும், பேராசிரியராகவும், மற்றும் குடியரசுத் தலைவராகவும் டாக்டர் அப்துல் கலாம், இந்தியாவுக்கு செய்த பணிகள் அளப்பரியதாகும். நாட்டை முன்னேற்றும் திட்டங்களைச் செயல்படுத்தியதில் டாக்டர் அப்துல் கலாமின் பங்கு மிகப் பெரியதாகும். 1998ம் ஆண்டு போக்ரான்- II அணுசக்தி சோதனைகளில் முக்கிய பங்கு வகித்ததன் மூலம் ‘இந்தியாவின் ஏவுகணை நாயகன்’ என்ற இந்திய மக்களால் போற்றப்படுகிறார்.

விங்ஸ் ஆஃப் ஃபயர்’, ‘மை ஜர்னி’ ‘பற்றவைக்கப்பட்ட மனங்கள்’ மற்றும் ‘இந்தியா 2020′ ஆகிய நூல்கள் மூலம் இளைய தலைமுறைகளுக்குச் சிறந்த வழிகாட்டுதல்களையும், உத்வேகத்தையும் அப்துல் கலாம் ஏற்படுத்தி இருந்தார்.

1981ம் ஆண்டில் பத்ம பூஷன் விருது, 1990ம் ஆண்டில் பத்ம விபூஷண் விருது, 1997ம் ஆண்டில் பாரத ரத்னா விருது, 1998ம் ஆண்டு வீர் சாவர்க்கர் விருது என பல விருதுகள் டாக்டர் அப்துல் கலாமுக்கு வழங்கப்பட்டன. பிரிட்டனின் மிக உயரிய விருதான “கிங் சார்லஸ் II பதக்கமும் டாக்டர் அப்துல் கலாமுக்கு வழங்கப்பட்டது. மேலும், அமெரிக்காவின் “ஹூவர் மெடல்” விருதும் அவருக்கு வழங்கப்பட்டது.

மாணவர்கள், இளைஞர்கள் இடையே கல்வி அறிவை வளர்ப்பதிலும், தன்னம்பிக்கையை விதைப்பதிலும் தன் வாழ்நாள் முழுவதையும் டாக்டர் அப்துல் கலாம் செலவழித்தார். கடந்த 2017ம் ஆண்டு, மேகாலயா மாநிலத்தின் தலைநகர் ஷில்லாங்கில் மாணவர்களிடையே உரையாற்றிக் கொண்டிருந்தபோதே டாக்டர் அப்துல் கலாம் காலமானார்.

மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு அப்துல் கலாம் பெரும் உந்துகோளாக விளங்கிய டாக்டர். அப்துல் கலாம் பிறந்த அக்டோபர் 15ம் தேதியை 2010ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபை, உலக மாணவர் தினமாக அறிவித்தது. தமிழகத்தில், டாக்டர் அப்துல் கலாமின் பிறந்த நாள், இளைஞர் எழுச்சி நாளாக கொண்டாடப்படுகிறது.

பணிவு, உண்மை, வெற்றிக்கான அர்ப்பணிப்பு ஆகிய நற்குணங்களால் உயர்ந்து நின்ற டாக்டர் அப்துல் கலாம், ஒவ்வொரு இந்தியருக்கும் ஒரு உந்து சக்தி என்றால் மிகையில்லை.

Tags: Dr. Abdul Kalam birthdayrameswaramMissile Hero Dr. Abdul Kalam
ShareTweetSendShare
Previous Post

தமிழகம், புதுச்சேரியில் 16,17ஆம் தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

Next Post

சென்னை உள்ளிட்ட 9 மாவட்டங்களுக்கு நாளை அதி கனமழைக்கான ரெட் அலர்ட் – பாலச்சந்திரன் தகவல்!

Related News

காசா மீதான போர் குறித்து கேள்வி – இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் இருந்து எம்.பி வெளியேற்றம்!

இந்தியாவும் – ஆப்கனும் இருதரப்பு உறவுகளை அதிகரிக்க ஒப்புக் கொண்டுள்ளது – ரந்தீர் ஜெய்ஸ்வால்

தமிழகத்தை போல் வேறு எந்த மாநிலத்திலும் இத்தனை சாதிகளை பார்த்ததில்லை – ஆளுநர் ஆர்.என்.ரவி

சீனாவில் பயங்கர நிலச்சரிவு – 10 பேர் பலி!

அமெரிக்காவில் குடியிருப்பு பகுதியில் சிறிய ரக விமானம் விழுந்து விபத்து – இருவர் பலி!

சத்தீஸ்கரில் நக்சல்களை கொன்ற வீரர்களை வெற்றித் திலகமிட்டு வரவேற்பு அளித்த பெண்கள்!

Load More

அண்மைச் செய்திகள்

புதுச்சேரி குறித்து அவதூறு – அமைச்சர் சேகர்பாபுவுக்கு கண்டனம்!

ரெய்டு பயத்தை காட்டி கூட்டணி அமைக்க வேண்டிய அவசியம் இல்லை – நயினார் நாகேந்திரன்

பயங்கரவாத நடவடிக்கைகளை பொறுத்துக் கொள்ள மாட்டோம் – அபுதாபியில் சிவசேனா எம்.பி ஸ்ரீகாந்த் ஷிண்டே பேச்சு!

இணையத்தில் வறுபடும் ராகுல் : பாகிஸ்தான் எதிர்க்கட்சி தலைவரானது எப்படி?

NEW WORLD ORDER : ராஜதந்திர தாக்குதல் கோலோச்சும் இந்தியா!

“இனப்படுகொலை வீடியோ” : தென்னாப்பிரிக்க அதிபரை அதிர வைத்த ட்ரம்ப்!

காலம் தாழ்த்தும் முகமது யூனுஸ்? : பாக்., சீனாவின் “பிடியில்” வங்கதேசம்!

பாகிஸ்தானில் நடக்கும் கூத்து : தோல்வியுற்ற ராணுவ தளபதிக்கு பீல்ட் மார்ஷல் பதவி!

அமெரிக்காவின் GOLDEN DOME : அதிநவீன வான்வெளி ஏவுகணை பாதுகாப்பு!

டாஸ்மாக் முறைகேடு – தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies