அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் பங்கேற்ற பொதுக்கூட்டத்தில் துப்பாக்கியுடன் இருந்த மர்மநபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கலிபோர்னியாவின் ரிவர்சைடு கவுண்டி பகுதியில் ட்ரம்ப் பிரச்சாரம் மேற்கொண்டார். அந்த கூட்டத்தில் துப்பாக்கி,வெடிமருந்துகள் மற்றும் போலி பாஸ்போர்ட்டுடன் இருந்த நபரை போலீசார் சுற்றிவளைத்து கைது செய்தனர்.
மேலும், முன்னாள் அதிபரின் உயிருக்கு எந்தவித ஆபத்தும் இல்லை எனவும், கைது செய்யப்பட்ட நபரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் காவல்துறை உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். டொனால்டு ட்ரம்ப் மீதான 3வது படுகொலை முயற்சி முறியடிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.