சென்னையில் மழையை எதிர்கொள்ள தயார் நிலையில் உள்ளதாக அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் தெரிவித்துள்ளனர்.
சென்னையில் அதி கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. இந்நிலையில் மழைக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரக்கோணத்தில் இருந்து தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் புதுப்பேட்டையில் உள்ள சமுதாய கூடத்திற்கு வந்துள்ளனர்.
மேலும் இது குறித்து பேசிய அவர்கள், மழையை எதிர்கொள்ள தயார் நிலையில் உள்ளதாகவும், மழை பாதிப்புகளிலிருந்து மக்களை பாதுகாக்க அனைத்து பாதுகாப்பு உபகரணங்களையும் தயார் நிலையில் வைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.