சென்னைக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டதை தொடர்ந்து உஷாரான வேளச்சேரி பகுதி மக்கள் அங்குள்ள மேம்பாலத்தில் தங்களது கார்களை பாதுகாப்பாக நிறுத்தியுள்ளனர்.
சென்னையில் அடுத்த மூன்று நாட்களுக்கு மிக கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டதால், மாநகரில் வசிக்கும் மக்கள் அனைவரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
அந்த வகையில் மாநகரின் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் மக்கள் தங்களது கார்களை மேடான பகுதிகளில் நிறுத்த தொடங்கியுள்ளனர். குறிப்பாக வேளச்சேரி மக்கள் பாலத்தின் இருபுறங்களிலும் தங்களது வாகனங்களை நிறுத்தி வைத்துள்ளனர்.
இதனிடையே கார்களை மேம்பாலத்தில் நிறுத்தினால் அபராதம் விதிக்கப்படும் என காவல்துறையினர் எச்சரித்துள்ளனர். ஆனால் இதற்கு வாகன ஓட்டிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.