உத்தரபிரதேசம் மாநிலம் பஹ்ரைச் பகுதியில் துர்கை சிலைகளை கரைக்கும் போது இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் ஒருவர் உயிரிழந்த நிலையில் 4 பேர் படுகாயம் அடைந்தனர்.
அங்கு போலீசார் குவிக்கப்பட்டதால் அமைதி திரும்பியது. இந்த நிலையில், ஒருவர் உயிரிழந்தது தொடர்பாக பஹ்ரைச் பகுதியில் இன்று காலை மீண்டும் கலவரம் வெடித்தது. ஒரு தரப்பினர் மற்றொரு தரப்பினர் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினர்.
மேலும் கடைகள் மற்றும் வாகனங்களை வன்முறையாளர்கள் தீவைத்து கொளுத்தினர். மருவத்துவமனைகளுக்குள் புகுந்து படுக்கைகளை அடித்து நொறுக்கி அடாவடியில் ஈடுப்பட்டனர். வன்முறை கட்டுக்கடங்காமல் சென்றதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.