மேக் இன் இந்தியா திட்டத்தில் இணைய வருமாறு அல்ஜீரிய நிறுவனங்களுக்கு குடியரசு தலைவர் திரவுபதி முர்மு அழைப்பு விடுத்தார்.
அல்ஜீரியா-இந்திய பொருளாதார மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய குடியரசு தலைவர் திரவுபதி முர்மு, இன்றைய நிச்சயமற்ற உலக சூழலில் இந்தியாவின் விரைவான வளர்ச்சி கவனித்தக்க வகையில் அமைந்துள்ளதாகக் கூறினார்.
அரசியல் ஸ்திரத்தன்மை, கொள்கை கணிப்பு, எளிதில் வர்த்தகம் மற்றும் சீர்திருத்தம் சார்ந்த பொருளாதார கொள்கை ஆகியவற்றால் கடந்த சில ஆண்டுகளாக இந்தியா சிறப்பான வகையில் வளர்ச்சி கண்டு 4 டிரில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான பொருளாதாரத்திற்கு உயர்ந்துள்ளதாக பெருமிதம் தெரிவித்தார்.
உற்பத்தி துறையை ஊக்குவிக்கும் சீர்திருத்தங்களால் இந்தியாவில் தொழில்களை எளிதில் நிறுவி வளர்ச்சி காண முடிவதாக அவர் குறிப்பிட்டார். மேக் இன் இந்தியா, மேக் ஃபார் வேர்ல்டு திட்டங்களில் இணைய அல்ஜீரியா நிறுவனங்களை வரவேற்பதாகவும் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு அழைப்பு விடுத்தார்.