சென்னையின் புறநகர் பகுதிகளில் பெய்துவரும் கனமழையால் திருமுல்லைவாயல் சிடிஎச் சாலையில் மழைநீர் குளம்போல் தேங்கியுள்ளது.
வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதை அடுத்து சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டது.
இதை தொடர்ந்து சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நள்ளிரவு முதல் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், திருமுல்லைவாயல் சிடிஎச் சாலையில் மழைநீர் குளம்போல் தேங்கியுள்ளதால் வாகன ஓட்டிகள் அவதிக்கு ஆளாகியுள்ளனர். மேலும், அங்குள்ள தனியார் பள்ளியை சுற்றிலும் மழைநீர் குளம்போல் தேங்கி நிற்கிறது.