தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வரும் நிலையில், சாலைகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக தமிழகத்தின்ன் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.
குறிப்பாக, சென்னை பெரம்பூர் பகுதியில் இரவு முதல் விட்டு விட்டு பெய்து வரும் கனமழை காரணமாக, ரயில்வே மேம்பாலத்திற்கு அடியில் உள்ள சுரங்கப்பாதையில் அதிகளவு மழைநீர் தேங்கியுள்ளது.
இதன் காரணமாக சுரங்கப்பாதை மூடப்பட்டுள்ளதால், வாகன ஓட்டிகள் மழையில் நெடுந்தூரம் சுற்றிச் செல்லும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.