பாரதத்தின் பெருமைக்குரிய மைந்தர் அப்துல் கலாமின் புகழை போற்றி வணங்குவோம் என தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
அவர் விடுத்துள்ள பதிவில், முன்னாள் குடியரசுத் தலைவரும், இந்தியாவின் ஏவுகணை நாயகன் எனப் போற்றப்படுபவருமான, பாரத ரத்னா, டாக்டர். அப்துல் கலாம் அவர்களது பிறந்த தினம் இன்று. எளிய குடும்பப் பின்னணியில் பிறந்து, இந்தியாவின் குடியரசுத் தலைவராக உயர்ந்தவர்.
தன் வாழ்நாள் முழுவதையும், நாட்டின் முன்னேற்றத்திற்காகவும், பாதுகாப்பிற்காகவும் செலவிட்டவர். பிரித்வி, அக்னி ஏவுகணைகளை உருவாக்கியதிலும், செயற்கைக்கோள்களை ஏவும் வாகனங்களை உருவாக்கியதிலும் முக்கியப் பங்கு வகித்தவர்.
கனவுகளிலிருந்து சிந்தனைகள் பிறக்கும், சிந்தனைகள் செயல்களாகும் என இளைஞர்களுக்கு வழிகாட்டியாகத் திகழ்ந்தவர். மாணவர்களின் கல்வி அறிவையும், தன்னம்பிக்கையையும் ஊக்குவிப்பதிலும் தனது வாழ்நாளைச் செலவிட்டவர். பாரதத்தின் பெருமைக்குரிய மைந்தரான ஐயா கலாம் அவர்கள் புகழைப் போற்றி வணங்குகிறோம் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
















