சென்னையில் விடாமல் பெய்த மழை காரணமாக சாலைகளில் மழைநீர் தேங்கி பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது. மழைக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் ஆங்காங்கே மரங்கள் முறிந்து விழுந்தன.
வட கிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதால், சென்னையில் விடாமல் பெய்த கனமழை பெய்து வருகிறது. இதனால் நுங்கம்பாக்கம், தியாகராய நகர், வடபழனி, சாலைகள் மற்றும் தாழ்வான பகுதிகளில் குளம்போல் மழைநீர் தேங்கியுள்ளது. இதனால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.
மேலும், சாலைகளில் ஆறுபோல் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியதால், பிரதான சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மழைக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் மரங்களும் ஆங்காங்கே முறிந்து விழுந்தன.
இதேபோல், முதலமைச்சர் ஸ்டாலினின் கொளத்தூர் தொகுதியில் மழைநீர் தேங்கி பொதுமக்கள் பெரும் சிரமத்தை சந்தித்தனர். மழைநீர் தேங்கி நிற்பதால், வாகன ஓட்டிகள், பொதுமக்கள் பெரும் சிரமம் அடைந்தனர்.