சென்னை அடுத்துள்ள பூந்தமல்லி தனி கிளை சிறை மற்றும் தேசிய புலனாய்வு சிறப்பு நீதிமன்ற வளாகத்தை மழை நீர் சூழ்ந்தது.
பூந்தமல்லி அடுத்துள்ள கரையான்சாவடி பகுதியில் பூந்தமல்லி தனி கிளை சிறை மற்றும் வெடிகுண்டு வழக்குகள் மற்றும் தேசிய புலனாய்வு சிறப்பு நீதிமன்றம் அமைந்துள்ளது.
மேலும், இந்த வளாகத்திலேயே மத்திய ரிசர்வ் போலீஸ் பாதுகாப்பு படையும் செயல்பட்டு வருகிறது. இந்த பகுதி முழுவதும் மழை நீர் சூழ்ந்துள்ளதால் குளம் போல் காட்சியளித்தது. இதனால், சிறைச்சாலை மற்றும் நீதிமன்றத்திற்கு உள்ளே வருபவர்களும், வெளியே செல்பவர்களும் சிரமத்திற்கு ஆளாகினர்.