வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளதால், 9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளன.
காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்றதால் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை கொட்டித்தீர்த்தது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை புதுச்சேரி – நெல்லூர் இடையே கரையை கடக்கும் என வானிலை மையம் அறிவித்ததை அடுத்து ராமநாதபுரத்திலுள்ள பாம்பன் துறைமுகத்தில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. இதனால் மீனவர்கள் கடலுக்கு செல்லாமல் இருக்கின்றனர்.
இதே போல கடலூர் துறைமுகத்திலும் 3ம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் எதிரொலியாக 3 எண் கூண்டு ஏற்றப்பட்டுள்ள நிலையில் காற்றோடு மழை பெய்யும் என அப்பகுதியை சேர்ந்த மீனவர்கள் கடலுக்கு செல்லாமல் வீடுகளிலே தஞ்சமடைந்துள்ளனர்.