ஆந்திராவில் கனமழை அதிகரித்து வருவதால் அதிகாரிகள் விழிப்புடன் இருக்குமாறு அம்மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு உத்தரவிட்டுள்ளார்.
தென்மேற்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்தம், தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ள நிலையில், புதுச்சேரி மற்றும் நெல்லூர் இடையே கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், ஆந்திராவின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வரும் நிலையில், பாதிக்கப்பட்ட பகுதிகளை முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு ஆய்வு செய்தார். மேலும், நெல்லூர் மாவட்டத்தில் 20 சென்டி மீட்டருக்கு அதிகமாக மழை பெய்துள்ளதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.