சென்னை ஆர்.கே.நகரில் மழை நீருடன் கலந்து, கழிவு நீரும் வீடுகளுக்குள் புகுந்ததால் மக்கள் கடும் சிரமம் அடைந்துள்ளனர்.
ஆர்.கே. நகர், ராயபுரம், வண்ணாரப்பேட்டை, கொருக்குப்பேட்டை, திருவொற்றியூர் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று பரவலாக மழை பெய்தது. இதனால், சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இன்றும் ஒரு சில இடங்களில் மழை பெய்து வருகிறது.
இந்த நிலையில், மழை நீருடன், கழிவு நீரும் சேர்ந்து வீடுகளுக்குள் புகுந்தது. ஆனால் மழைநீரை அகற்றாமல் மாநகராட்சி நிர்வாகம் முறையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.