அதிகன மழை நேரத்தில் பொதுமக்களுக்கு உணவு பொட்டலங்களை வழங்குவதற்காக தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த ட்ரோன்களை பறக்கவிட்டு ஒத்திகை மேற்கொள்ளப்பட்டது.
வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக சென்னையில் அதி கனமழை கொட்டி தீர்த்தது. மேலும், அதி கனமழை பெய்யும் நேரத்தில் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு தேவையான மருந்துகள் மற்றும் தண்ணீர் பாட்டில்கள், உணவுகளை வழங்க சென்னை மாநகராட்சி சார்பில் பத்திற்கும் மேற்பட்ட ட்ரோன்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், சென்னை ரிப்பன் மாளிகை வளாகத்தில், மாநகராட்சி மேயர் பிரியா தலைமையில் ட்ரோன்களை பறக்கவிட்டு ஒத்திகை செய்யப்பட்டது.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய பேஸ் சீனியர் ட்ரோன் ஆப்பரேட்டர் அகமது அலி, அதி கனமழை பெய்யும் நேரங்களில், தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு உணவு வழங்குவதற்காக ட்ரோன்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
மேலும், சோதனை முறையில் ட்ரோன்கள் பறக்கவிட்டு ஒத்திகை செய்யப்பட்டதாகவும், ட்ரோன்கள் மூலம் 10 கிலோ உணவு பொட்டலங்களை பொதுமக்கள் இருக்கும் பகுதிக்கு எடுத்து செல்ல முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.