திருப்பதி திருமலையில் இடைவிடாமல் பெய்த மழை காரணமாக பக்தர்கள் அவதிக்குள்ளாகினர்.
வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக திருப்பதி திருமலையில் காலை முதல் கனமழை பெய்தது. சுமார் 5 மணி நேரம் விடாமல் தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக திருப்பதி மலையில் உள்ள தாழ்வான பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
இதனால், திருமலைக்கு வந்துள்ள பக்தர்கள் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு செல்ல முடியாத சூழல் ஏற்பட்டது. திருப்பதி திருமலையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு இதே நிலை நீடிக்கும் என்பதால் பக்தர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் மலை பாதைகளில் பயணிக்க வேண்டும் என தேவஸ்தான நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.