சென்னையின் குடிநீர் ஆதாரமான செம்பரம்பாக்கம் ஏரியில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார்.
சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பெய்த கன மழை காரணமாக பல்வேறு நீர் நிலைகள் நிரம்பி வருகின்றன. இந் நிலையில் சென்னை குடிநீர் ஆதாரமாக விளங்கக்கூடிய செம்பரம்பாக்கம் ஏரிக்கும் அதிக நீர் வரத்து வரும் நிலையில், ஏரியின் நிலவரம் குறித்து துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது ஏரியில் தண்ணீர் இருப்பு எவ்வளவு உள்ளது மதகுகள், செட்டர்கள் முறையாக பராமரிக்கப்பட்டுள்ளதா என்பது குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். செம்பரம்பாக்கம் ஐந்து கண் மற்றும் 19 கண் மதகில் இருந்த செட்டர்கள் இயக்கி காட்டப்பட்டதையடுத்து அவர் அதனை பார்த்து மதகின் உறுதி தன்மை குறித்து கேட்டறிந்தார்.
அமைச்சர்கள் தா.மோ. அன்பரசன், நாசர், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் மற்றும் பொதுப்பணி துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.