நைஜீரியாவில் பெட்ரோல் டேங்கர் லாரி வெடித்த விபத்தில் 147 பேர் உயிரிழந்தனர்.
நைஜீரியாவின் ஜிகாவா பகுதியில் பெட்ரோல் ஏற்றிச்சென்ற டேங்கர் லாரி திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. நள்ளிரவு இந்த விபத்து ஏற்பட்ட நிலையில், டேங்கரில் இருந்து பெட்ரோல் கசிந்து வெளியேறத் தொடங்கியுள்ளது.
இதை பார்த்த அப்பகுதி மக்கள் கசிந்த பெட்ரோலை சேகரிக்க தொடங்கியுள்ளனர். அப்போது திடீரென லாரியில் தீப்பிடிக்க தொடங்கிய நிலையில், தீ மளமளவென அப்பகுதி முழுவதும் பரவியது.
இந்த விபத்தில் இதுவரை 147 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், 100க்கும் மேற்பட்டோருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், விபத்து ஏற்படுத்திய லாரி ஓட்டுநரை உயிருடன் மீட்ட அந்நாட்டு போலீசார், அவரிடம் விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.